மைக்ரோசாப்ட் சர்வர் கோளாறால் பாதிக்கப்பட்ட விமான சேவை சீராகி வருவதாக மத்திய விமான போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
விண்டோஸ் மென்பொருள் இயங்கு தளத்தில் வெள்ளியன்று திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக இந்தியாவில் விமான சேவைகள் பாதிக்கபப்ட்டன.
ஆன்லைன் செக்-இன், போர்டிங் முடங்கியதால் இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட், ஆகாசா உள்ளிட்ட விமான நிறுவனங்கள் கையால் போர்டிங் பாஸை எழுதித் தந்து சேவையை வழங்கின.
ஒரு சில விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில், அதிகாலை 3 மணி முதல் விமான நிறுவனங்களின் கணினிகள் இயல்பாக வேலை செய்யத் துவங்கி இருப்பதாகவும், விமான சேவைகள் சிரமின்றி நடைபெறத் தொடங்கி விட்டதாக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் கே. ராமமோகன் நாயுடு கூறியுள்ளார்.